Ram Charan: சபரிமலை மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்; நெகிழ்ந்த ரசிகர்கள்
பிரபல நடிகரான ராம் சரண், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியிருந்த நிலையில், இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு ராம் சரண், புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் ஓர்க் முடிந்து, ராம் சரண் படப்பிடிப்புக்குத் தயாராகியிருக்கிறார். இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீ விஜய துர்கா தேவி கோயில் மற்றும் அமீன் பீர் தர்காவிற்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார் ராம் சரண். அவருடன், இயக்குநர் புச்சி பாபு சனாவும் சென்று படத்திற்கான ஸ்கிரிப்ட்டை கோயில் மற்றும் தர்காவில் வைத்து பிரார்த்தனை செய்துள்ளார்.
Ramcharan storm in Kadapa. pic.twitter.com/Jubks1S63k
— Manobala Vijayabalan (@ManobalaV) November 18, 2024
ராம் சரணின் வருகையை அறிந்த ரசிகர்கள் கடப்பாவில் குவிந்தனர். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு அந்தப் பகுதியே அமர்களமாகியிருக்கிறது. மேலும், சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் ராம் சரண், தர்காவிற்குச் சென்றது சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாக வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஸ்பெஷலான தகவல் என்னவென்றால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த தர்காவிற்குச் செல்லுமாறு முன்பே சொல்லிருக்கிறார். அதை மனதில் வைத்து தற்போது, கடப்பாவில் இருக்கும் அமீன் பீர் தர்காவிற்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார் ராம் சரண்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

