Anshul: `ஒரே இன்னிங்ஸ், 10 விக்கெட் - ரஞ்சியில் புதிய சாதனை; கவனம் ஈர்க்கும் முன்னாள் MI வீரர்

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில், 23 வயது இளம் வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸின் மொத்த விக்கெட்டுகளையும் சாய்த்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அரிய சாதனையானது ரஞ்சி டிராபியில் மூன்றாவது முறையாக அரங்கேறியிருக்கிறது. இதற்கு முன்னர், 1956 - 57 ரஞ்சி டிராபியில் முதல்முறையாக அஸ்ஸாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் வீரர் பிரேமாங்சு சாட்டர்ஜி ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்தார். அதையடுத்து, 1985 - 86 டிராபியில் விதர்பா அணிக்கெதிரான ஆட்டத்தில் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் பிரதீப் சுந்தரம் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

1⃣ innings 1⃣0⃣ wickets

Historic Spell

3⃣0⃣.1⃣ overs
9⃣ maidens
4⃣9⃣ runs
1⃣0⃣ wickets

Watch ️ Haryana Pacer Anshul Kambojs record-breaking spell in the 1st innings against Kerala #RanjiTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/RcNP3NQJ2y

— BCCI Domestic (@BCCIdomestic) November 15, 2024

அதற்குப் பின்னர், 38 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் முதல்முறையாக, கேரளா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்திருக்கிறார் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ். இன்னும் 10 நாள்களில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெறவிருக்கும் சூழலில், அன்ஷுல் கம்போஜ் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது ஐ.பி.எல் மொத்த அணிகளின் பார்வையையும் இவர் பக்கம் திருப்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 20 லட்சம் என்ற ஆரம்பத் தொகைக்கே எடுக்கப்பட்ட அன்ஷுல் கம்போஜ், மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணிக்காக விளையாடிய இவர் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில், இந்தியா பி-க்கு எதிரான ஆட்டத்தில் 8 வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ஷுல் கம்போஜ்

இதுமட்டுமல்லாது, 2023-24 விஜய் ஹசாரே தொடரில் ஹரியானா முதல்முறையாக சாம்பியனானதில் முக்கிய பங்காற்றிய அன்ஷுல் கம்போஜ், 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஆண்டு முழுவதும் தன்னுடைய சிறப்பான ஆட்டங்களால் இந்திய அணியின் கதவைத் தட்டியிருக்கும் அன்ஷுல் கம்போஜ், ஐ.பி.எல் ஏலத்தில் நிச்சயம் கவனம் ஈர்ப்பார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.