சகோதரியின் காதலனுக்கு மது விருந்து... துண்டு துண்டாக சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்..!

வேறு மதத்தை சேர்ந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ குடும்பத்தில் கடும் எதிர்ப்பை சந்திக்கின்றனர். மும்பையில் அவ்வாறு வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பை கோராய் பகுதியில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கையில் எழுதப்பட்டு இருந்த டாட்டூவின் அடையாளம் கொண்டு, இவ்வழக்கில் போலீஸார் துப்புத்துலக்கி உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பஸ்வான்

கொலை செய்யப்பட்ட வாலிபர் பெயர் பஸ்வான் (21) என்று தெரிய வந்துள்ளது. பஸ்வான் தந்தை அவரை அடையாளம் காட்டினார். பஸ்வான் தந்தையிடம் விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் பஸ்வானை கொலை செய்ததாக மும்பை பயந்தர் பகுதியைச் சேர்ந்த மொகமத் சத்தார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் தர்பகங்காவைச் சேர்ந்த பஸ்வான் தற்காலிகமாக புனேயில் வசித்து வந்தார்.

போலீஸாரின் தீவிர விசாரணையில், பஸ்வான் தனது கிராமத்தில், வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்வான் தர்பகங்காவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது அங்கு வந்த பெண்ணை முதன் முதலில் சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.

இது குறித்து இரு குடும்பத்திற்கும் தெரிய வந்ததால் ஊர் பஞ்சாயத்து கூடி இப்பிரச்னைக்கு தீர்வு கண்டனர். பஸ்வானை அவரது தந்தை புனேவிற்கு அனுப்பி விட்டார். அப்பெண்ணையும் மும்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மும்பை வந்த பிறகும் அப்பெண் தனது சகோதரன் போனை பயன்படுத்தி அடிக்கடி பஸ்வானுடன் பேசியிருக்கிறார். இது அப்பெண்ணின் சகோதரனுக்கு தெரியாது.

மது விருந்து (representational image)

பஸ்வான் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மும்பை வந்துள்ளார். உடனே தனது காதலி தனக்கு போன் செய்த நம்பருக்கு போன் செய்தபோது அப்பெண்ணின் சகோதரர் மொகமத் எடுத்து பேசினார். உடனே பஸ்வானை பயந்தரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி தெரிவித்துள்ளார். பஸ்வான் அங்கு சென்ற போது பஸ்வானுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க செய்துள்ளார் மொகமத். அளவுக்கு அதிகமாக மது குடித்த பஸ்வானை கழுத்தை அறுத்த மொகமத் உடலை பல துண்டுகளாக வெட்டி காலி பெயிண்ட் டப்பாவில் அடைத்து அதனை சாக்குமூட்டையில் கட்டி ஆட்டோவில் எடுத்துச்சென்று கோராய் பகுதியில் போட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

பஸ்வானின் தந்தை ஜிதேந்திரா இது குறித்து கூறுகையில்,எனது மகனை சதி செய்து வரவழைத்து கொலை செய்துவிட்டனர்என்றார். மொகமத் மீன் வியாபாரம் செய்து வந்தார். அவர் பஸ்வானை மீன் வெட்டும் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.