Rain Alert: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்! - இந்திய வானிலை மையம்| Live

நவம்பர் 14 டு 16:  எந்தெந்த மாவட்டங்களில் மழை?!

நவம்பர் 14 டு 16: எந்தெந்த மாவட்டங்களில் மழை?!
நவம்பர் 14 டு 16: எந்தெந்த மாவட்டங்களில் மழை?!
நவம்பர் 14 டு 16: எந்தெந்த மாவட்டங்களில் மழை?!

வரும் நவம்பர் 14-ம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

நவம்பர் 15-ம் தேதி கோவை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட பல மேற்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும்.

நவம்பர் 16-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்! - இந்திய வானிலை மையம்

இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுரை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

நாளை தமிழ்நாட்டில் சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

"மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும்" - பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆர்வலர்

``சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்து இருக்கிறது.

குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த 2 மணி நேரத்தில் (பகல் 12 மணி வரை) ஒரு சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். ECR, OMR பகுதிகளில் மழை நின்ற பிறகு வட சென்னையில் மழை பொழிவு குறையும். மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்" என்று பிரதீப்ஜான் பதிவிட்டிருக்கிறார்

சென்னையில் துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மேயர் பிரியாவுடன் துணை முதலமைச்சர் சென்னை மாநாகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் விளைவாக, தற்போது, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோர பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இன்று அதிகாலையில்‌ இருந்து சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஓ.எம்.ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது‌.

வானிலை மையம் கணிப்பு

இதை முன்னிட்டு இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வானிலை மையத்தின் கணிப்பு படி, இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு, சென்னையில் மயிலாப்பூர், மாதவரம், தண்டையார்பேட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் லேசான மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.