CT 25: நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வந்த விளையாடுவதில்லை? - ரசிகரிடம் மௌனம் கலைத்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி மாறி, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்று சூழல் உருவாகியிருக்கிறது. காரணம், பாதுகாப்பு காரணமாக 2008 முதல் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை நிறுத்திவிட்டது.

சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா, பாகிஸ்தான்

கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய ஆசியக் கோப்பை தொடரில் கூட, தனது போட்டிகளை இந்திய அணி இலங்கையில் விளையாடியது. இவ்வாறிருக்க, பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பாதுகாப்பு காரணங்களால் அங்குச் சென்று விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, இந்திய அணி வந்து விளையாட வேண்டும் எனக் கூறிக்கொண்டிருக்கிறது. அப்படி இந்திய அணி வரவில்லையென்றால், நாங்களும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என நேற்று முன்தினம் (நவம்பர் 10) பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப் தெரிவித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Aayat Raza Qureshi (@aayatqureshi.14)

இந்த நிலையில், இந்தியாவின் டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் ரசிகர் ஒருவர், `நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வருவதில்லை? எனக் கேள்விகேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், அந்த வீடியோவில் ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த சூர்யகுமார் யாதவ், `பிரதர், அது எதுவும் எங்கள் கையில் இல்லை என வெளிப்படையாகப் பதிலளித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.