வீட்டுச் சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை, மாதம் ரூ.50,000 | ஆடு வளர்ப்பில் சாதிக்கும் பொறியாளர்!
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கெளதம். பொறியியல் பட்டதாரியான இவர் படித்து முடித்ததும் சில ஆண்டுகள் ஐடி துறையில் வேலை பார்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் நகரச் சூழல் பிடிக்காமல் போக, கிராமத்துக்கே திரும்பியிருக்கிறார். அடிப்படையில் விவசாய குடும்பம் என்பதால் இவர் வீட்டில் ஆடு வளர்ப்பு என்பது அவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது.
இதனை ஒரு தொழிலாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று யோசித்த கெளதம் ஆடு வளர்ப்பினை லாபம் தரக்கூடிய தொழிலாகச் செய்துகொண்டிருக்கிறார். தலைச்சேரி மற்றும் போயர் இன ஆடுகளை வளர்க்கும் இவர், தாய் ஆடுகள் மூலம் குட்டி உற்பத்தி, கறிக்கான ஆடுகள் என இரண்டையும் விற்பனை செய்கிறார், தவிர ஆடுகளுக்கு தீவனம் வழங்கக்கூடிய இரும்பால் ஆன தீவனத் தொட்டிகள் மற்றும் தீவன கரனைகளை விற்பனை செய்து வருகிறார். ஆடுவளர்பில் தனக்கு உள்ள அனுபவத்தை கெளதம் இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


