Delhi Ganesh: ` நான் மிஸ் செய்த ஒரு நடிகர் என்றால் டெல்லி கணேஷ் தான் - பார்த்திபன்

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து புகழ்பெற்ற குணசித்திர நடிகரான டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார்.

அவருக்கு வயது 81. மூத்த குணச்சித்திர நடிகராக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் என்பதால் அவரின் இழப்பு திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பிரபலங்கள் பலரும் டெல்லி கணேஷிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் நேரில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் குறித்து பேசிய பார்த்திபன், "இந்த மாதிரி ஒரு துக்க நிகழ்வுக்கு நான் வருவதெல்லாம் கடமை என்றோ அல்லது நம்மை பதிவு செய்ய வேண்டும் என்றோ நினைப்பதில்லை. இந்த குடும்பத்தினுடைய துக்கத்தில் எப்படியாவது பங்குப் பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

டெல்லி கணேஷ் அவர்கள் ரொம்ப எளிமையாக, இலகுவாக நடிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு நடிகர். நான் இதுவரை சிறந்த நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதில்லை. ஆனால் திறமையான நல்ல நடிகர்ளுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

பார்த்திபன்

அதில் நான் மிஸ் செய்த ஒரு நடிகர் என்றால் டெல்லி கணேஷ் அவர்கள்தான். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை ஆனால், கடைசிவரை அது நடக்காமலே போய்விட்டது. டெல்லி கணேஷைப் பார்க்கும்போதெல்லாம் உங்க கூட நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். இது எனக்கு இரு மிகப்பெரிய இழப்புதான்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.