`அவள் விருதுகள் விழாவில் அறிமுகமான Vikatan Play; ஆடியோ வடிவில் வெளியான `நீரதிகாரம்
தமிழகத்தின் சாதனைப் பெண்களைக் கொண்டாடும், 2024-க்கான `அவள் விருதுகள் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகடனின் புதிய முயற்சியான `Vikatan Play (விகடன் ப்ளே) சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பாரதி பாஸ்கர் இன்றைய நிகழ்ச்சியில் `விகடன் ப்ளே-க்கான லோகோவை வெளியிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடிய விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், `விகடன் ப்ளே-வின் முதல் எக்ஸ்க்ளூசிவ் ஒரிஜினல் ஆடியோவாக `நீரதிகாரம் தொடரை வெளியிட்டார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கோடு சேர்த்து அணைக் கட்டுமானத்தில் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் மக்களின் உழைப்பையும் வரலாற்றையும் விரிவாகப் பதிவு செய்தது, ஆனந்த விகடனில் 122 வாரங்கள் தொடராக வந்த `நீரதிகாரம் நாவல். நாவலாகவும், புத்தகமாகவும் விகடன் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற `நீரதிகாரம் இன்று முதல் ஆடியோ வடிவிலும் வெளியாகியிருக்கிறது.
எப்படி கேட்பது?
1. நீரதிகாரத்தின் முதல் 5 ஆடியோ எபிசோடுகள் இன்று வெளியாகியுள்ளன. இனி வாரந்தோறும் வியாழன் அன்று 5 புதிய எபிசோடுகள் வெளியாகும்.
2. விகடனின் Android மற்றும் iOS செயலிகளை இன்ஸ்டால் செய்து இந்த ஆடியோக்களைக் கேட்கலாம். App-ன் VIP பக்கம் மற்றும் Vikatan Play menu icon ஆகிய இரண்டிலும் புதிய நீரதிகாரம் தொடர் அப்டேட் ஆகியிருக்கும். ஒருவேளை பழைய App வெர்ஷனாக இருந்தால் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யவும். (Android: 5.6.6.1 | iOS: 7.7)

3. நீரதிகாரம் ஆடியோ புத்தகத்தின் நேரடி லிங்க்: https://www.vikatan.com/audio-book/194523 (விகடன் App-ல் மட்டுமே இது Open ஆகும். எனவே App-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு Click செய்யவும்.
மொபைலில் இந்த வசதியை பெற க்ளிக் செய்க.. https://vikatanmobile.page.link/web-play
4. நீரதிகாரம் ஆடியோ புத்தகம் மட்டுமல்ல; இனி வாரந்தோறும் வெளியாகவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் `விகடன் ப்ளே ஆடியோக்களையும் நீங்கள் இலவசமாகவே கேட்கலாம். இன்னும் பல புதிய ஆடியோக்கள் உங்களுக்காக அணிவகுத்து நிற்கின்றன. எனவே வியாழன்தோறும் ஆச்சர்யங்களுக்குத் தயாராக இருங்கள்.
5. விகடன் ப்ளே தொடர்பான கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு வாசகர்கள் webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
