Prabhas: இனிமே நாம தான்! - அடுத்த 3 படங்களுக்கும் பிரபாஸ்தான் ஹீரோ; ஹொம்பாலே நிறுவனம் அறிவிப்பு

இந்தியளவில் ஹிட்டான படங்களின் வரிசையில் கே.ஜி.எஃப் 1-க்கு முக்கிய இடமுண்டு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எஃப் பாகம் 1, பாகம் 2, ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா என மாபெரும் வெற்றிப் படங்களை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, தெலுங்கின் பிரபல நடிகர் பிரபாஸ்ஸை வைத்து, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படத்தைத் தயாரித்தது. இந்தப் படமும் ரூ. 700 கோடிக்கும் மேல் வசூலித்து வணிக வெற்றியைத் தேடித் தந்தது. இந்நிலையில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சலார் 2 உள்ளிட்ட அடுத்த மூன்று படங்களிலும் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

! #PrabhasXHombal3Films

We are proud to unite with the Rebel Star, #Prabhas, in a groundbreaking three-film partnership that celebrates the essence of Indian cinema and aims to take it to the world. This is a declaration of… pic.twitter.com/E4osJGaMgR

— Hombale Films (@hombalefilms) November 8, 2024

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மேட் இன் இந்தியா பயணம் கடைசிவரை தொடரும்! ரிபெல் ஸ்டார் பிரபாஸ்ஸுடன் 2026 முதல் 2028 வரை 3 படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதை மிகவும் பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்திய சினிமாவின் சாரம்சத்தை உலகத்துக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். மறக்க முடியாத சினிமாட்டிக் அனுபவத்தைத் தருவோம் என்ற எங்களது வாக்குறுதி பிரகடனமே இது. அதற்கான மேடை தயாராக இருக்கிறது. எங்களின் இலக்குக்கு எல்லையே இல்லை. சலார்-2விலிருந்து இந்த பயணத்தைத் தொடங்குகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.