Career: தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் பணி; திருநம்பிகள், இடைபாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் பணி.
என்ன பணி?
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்.
மொத்த காலி பணியிடங்கள்: 2
குறிப்பு: சென்னை மாவட்டத்தில் சிறப்பாகச் சேவை செய்து வரும் தகுதியான திருநம்பி (Transman) மற்றும் இடைபாலின (Inter-Sex) நபர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
அவர்களது சுய விவரக் குறிப்புடன் (Bio-Data) சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் பற்றி...
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் பதவிக் காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த உறுப்பினர்களுடன், கூடுதலாக இடைபாலின நபர் ஒருவரையும், திருநம்பி ஒருவரையும் நியமிக்கச் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


