RN Ravi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! - சூரசம்ஹார நிகழ்வுக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து
முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமாகவும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பானது. 6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 7) மாலையில் கடற்கரை பகுதியில் நடைபெறவிருக்கிறது. இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்குக் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில், சூரசம்ஹார வைபவத்துக்குத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்திருக்கிறது.
சூரசம்ஹார வைபவத்தில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் முருகப்பெருமான் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியைப் பெருக்கி, அறியாமையின் நிழலில் இருந்து வெளிவரும் துணிச்சல், வலிமை, ஞானம் ஆகியவற்றை வழங்கி, நமக்குள்ளும் நம்மை சுற்றியும்… pic.twitter.com/vXMTYfF9MS
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 7, 2024
இது குறித்து, எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, "சூரசம்ஹார வைபவத்தில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் முருகப்பெருமான் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியைப் பெருக்கி, அறியாமையின் நிழலிலிருந்து வெளிவரும் துணிச்சல், வலிமை, ஞானம் ஆகியவற்றை வழங்கி, நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் பீடித்துள்ள தீய சக்திகளை வீழ்த்தி, தர்மத்தையும் நியாயத்தையும் உறுதிப்படுத்த அருள்புரிவாராக. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று ட்வீட் செய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


