நண்பா! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

“ஹலோ அங்கிள்! நான் விஸ்வநாத் பேசறேன். எப்படி இருக்கீங்க?”

யார் விஸ்வநாத்? ராகவனுக்கு ஞாபகம் வரவில்லை.

அவனே தொடர்ந்தான். “அங்கிள் நான் வெங்கட்டோட ஃப்ரெண்ட்.”

ஓ! அவர் மகனுடைய பள்ளித் தோழன்..எல்கேஜியிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். நல்ல நண்பர்கள்.

“எப்படி இருக்கிற விஸ்வநாத்? உன்னைப் பார்த்து பல வருடங்களாகி விட்டது. என் போன் நம்பர் எப்படி கிடைத்தது? இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கேள்விகளை அடுக்கினார் ராகவன்.

“நான் நாளை உங்க வீட்டுக்கு வந்து பேசறேன். லொகேஷன் ஷேர் பண்ணுங்க அங்கிள்”

அடுத்த நாள் வீட்டுக்கு வந்தான் விஸ்வநாத்.. ஆளே மாறி இருந்தான் நல்ல உயரமாய் இருந்தான் அடையாளம் தெரியவில்லை உள்ளே வந்தவன் தன் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து விட்டு வணங்கினான் “என் திருமணம் இந்த மாதம் விஜயவாடாவில் நடக்க போகுது நீங்க கட்டாயம் கல்யாணத்துக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கணும். வெங்கட்டே வந்தது போல நினைத்துக் கொள்வேன் “

ராகவன் மனைவி சுதா காபி கலந்து கொண்டு வந்து இருவருக்கும் தந்து விட்டு எதிரே அமர்ந்தாள்.

சித்தரிப்புப் படம்

“ விஸ்வநாத் எப்படி என் செல் நம்பர் கிடைத்தது? உன்னை பார்த்து  பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது” ராகவன் மீண்டும் வினவினார்.

காபியை பருகியவாறே தொடர்ந்தான். “பள்ளியில் படித்த போது நானும் வெங்கட்டும் நெருங்கிய நண்பர்கள் படிப்பு முடிந்தவுடன் நான் மேற்படிப்புக்காக விஜயவாடா சென்று விட்டேன். அங்கு எம்.பி.பி.எஸ் எம்.டி என என் படிப்பு தொடர்ந்தது அங்கேயே ரேடியாலஜிஸ்ட்டாக ஒரு மருத்தவமனையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் “

“வெங்கட்டுடன்  தொடர்பு கொள்ள பலமுறை முயன்றேன் உங்க போன் அட்ரஸ் எல்லாம் மாறிவிட்டது. பிறகு வேறொரு நண்பன் மூலம் வெங்கட் விபத்தில் இறந்துவிட்டதை அறிந்தேன். நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது 

அங்கே சிறிது நேரம் மௌனம் நிலவியது.

“எல்லாம் விதி.. எங்க வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது பெருமூச்சு விட்டார் ராகவன்.

“உங்களை சந்திக்க பல முறை முயன்றேன் ஒரு முறை இங்கு வந்த போது உங்க பழைய அபார்ட்மெண்ட்டுக்கு சென்றேன். யாரும் உங்களைப் பற்றிய சரியான தகவல் தரவில்லை” 

“பிறகு எப்படி கண்டுபிடித்தாய்?” 

“உங்க கடை விலாசத்தைக் கண்டுபிடித்து அங்கும் போனேன் அங்கு வேறொரு கடை இருந்தது உங்களைப் பற்றி கேட்டேன் அவர்களுக்கு தெரியவில்லை” 

“google  நண்பர்கள் என்று தேடி சோர்வடைந்து விட்டேன்”

“நாங்க மூன்று வீடுகள் மாறியதால் அட்ரஸ் எல்லாம் மாறிவிட்டது” 

சித்தரிப்புப் படம்

“அது எனக்கு தெரியாது அங்கிள். மறுமுறை இங்கு வந்த போது மீண்டும் உங்க பழைய அப்பார்ட்மெண்டுக்கு போனேன் ஒருவர் நீங்க மாறிய முதல் விலாசத்தைக் கொடுத்தார் அங்கும் போனேன் கிடைக்கவில்லை”

“சொன்னா நம்ப மாட்டீங்க.. சில நாட்களுக்கு முன் வெங்கட் என் கனவில் வந்தான். இது எனக்கு எதையோ உணர்த்துவது போல இருந்தது.”

“இப்போது என் திருமணம் நிச்சயிக்கபட்ட நிலையில் எப்படியாவது உங்களை சந்திக்க வேண்டும். என் திருமணத்தில் கலந்து கொண்டு  எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என நினைத்தேன் அப்போ தான் என் மனதுக்கு ஒரு நிறைவு கிடைக்கும் போல் என்னுள் ஒரு உணர்வு “

விஸ்வநாத் தொடர்ந்தான். “மறுபடியும் உங்க அட்ரஸை தேடலானேன். எதேச்சையாக ஒருநாள் உங்க பழைய வீட்டிற்கு அருகில் எனக்கு தெரிந்த பெண்மணியை பார்த்தேன் உங்களைப் பற்றி விசாரித்தேன் அவருக்குத் தெரிந்தவர் உங்களுக்கு உறவினர் என்றும் அவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார் அந்த உறவினர் Aunty யின் அக்காவுக்கு நெருங்கிய சொந்தமாம் கடைசியில் அவர் மூலமாக உங்க போன் நம்பர் கிடைத்தது” 

“ஆச்சரியமாக இருக்கு.. எங்களை பார்க்க எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறாய். இந்த பரபரப்பான வாழ்க்கையில் நெருங்கிய உறவுகளை சந்திக்க கூட முடிவதில்லை. அப்படி இருக்க இத்தனை வருடங்களாக உன் பிஸியான மருத்துவப் பணிகளுக்கிடையேயும் தேடி எங்களைப் பார்க்க வந்தது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. நான் இதை எதிர் பார்க்கலை. வெங்கட் போன பின் நெருங்கிய சொந்தங்கள் தவிர யாருடனும் நாங்கள் அவ்வளவாக தொடர்பில் இருக்கவில்லை. எந்தவொரு விழாக்களுக்கும் செல்வதுமில்லை.”“. 

“”அங்கிள் !  நான் உங்களை வெங்கட்டின் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.  என்னை உங்க நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அடிக்கடி உங்களைப் பார்க்க இங்கு வருவேன். நீங்களும் என் நண்பனாக கட்டாயம் என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும்” 

சொன்னவனை ஏறிட்டார் ராகவன்.

நட்புக்கு இவ்வளவு வலிமையா? ஒருவர் இறந்த பின்னும் கூட நட்பு தொடருமா?. அதுவும் இந்தக் காலத்திலா!. நெகிழ்ந்தார் ராகவன்.

சித்தரிப்புப் படம்

நல்ல நண்பனாக விஸ்வநாத் திருமணத்துக்கு போய் வந்தார் ராகவன். திருமணத்துக்குப் பின் மனைவியுடன் அமெரிக்கா சென்ற தன் புது நண்பனுடன் தினமும் பேசிக் கொண்டிருப்பது அவருக்கு வாழ்வில் ஒரு மாற்றத்தையும் தனி உற்சாகத்தையும் தந்தது. . 

உண்மை தான்..வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருப்பதை நட்புக்கு கிடைத்த வெகுமதியாக உணர்ந்து மகிழ்கிறான் நல்ல நண்பன். ரத்தன் டாடாவுக்கு ஒத்த கருத்து கொண்ட சாந்தனு நண்பனாகக் கிடைத்தது போல தனக்கு இந்த வயதில் இளம் வயதான விஸ்வநாத்  தோழனாகக் கிடைத்ததையெண்ணி மகிழ்ந்தார் ராகவன்.

நட்புக்கு வயது தடையில்லை. கொடிய விதி கூட நட்பை பிரிக்க முடியாது நட்பு என்றும் நினைவில் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

( உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது )

-ரத்னா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.