``டைனோசர்களின் நிலை யானைகளுக்கும் வரக்கூடாது - கேரள உயர் நீதிமன்றம் கூற காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் நடைபெறும் திருச்சூர் பூரம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்களில் யானைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தமிழக கோயில்களில் கோசாலைகளில் பசுக்கள் பாதுகாக்கப்படுவது போன்று குருவாயூர் கோயிலில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. கேரளாவில் பாரம்பர்ய விழாக்களில் யானைகளின் மீது சுவாமி எழுந்தருளல் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் யானைகள் பாதுகாப்பு குறித்து கேரள உயர் நீதிமன்றம் சில விதிமுறைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பாகமாக அமிக்கஸ்கியூரி சில விதிமுறைகளை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். அதில், திருவிழாக்களின்போது யானைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் யானை பயன்படுத்தப்பட்ட பின்னர் 24 மணி நேரம் யானைக்கு ஓய்வு அளித்த பின்னர் அடுத்த நிகழ்ச்சியில் அந்த யானையை பயன்படுத்த வேண்டும். திறப்புவிழா, திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் யானைகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு நாள் 100 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்தில் யானைகளை கொண்டு செல்லக்கூடாது என்பது போன்ற விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

திருச்சூர் பூரம் விழாவில் யானைகள்

இந்த விவகாரத்தில் கேரள அரசும் சில நிலைபாடுகளை எடுத்துள்ளது. யானை எழுந்தருளால் நிகழ்ச்சி மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம் என்பதால் தேவசம்போர்டு மற்றும் யானைகளின் உரிமையாளர்களை இந்த வழக்கில் கட்சி சேர்க்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு தீர்மானங்களை பிறப்பித்துவிட வேண்டாம் எனவும் கேரள அரசு வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் திருவிழா காலம் தொடங்க இருக்கும் நிலையில் யானைகள் பயன்படுத்தப்படும் விவகாரத்தை ஐகோர்ட் கையில் எடுத்து உள்ளது பேசுபொருளாகி உள்ளது. யானைகள் மீது கொடூரமாக நடத்தப்படும் தாக்குதல்களை முடிவு கொண்டு வர வேண்டும் என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என கூறப்படுகிறது.

கோர்ட்

இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. கேரளாவில் 2018-ம் ஆண்டுக்கு பிறகு 154 யானைகள் மரணம் அடைந்துள்ளது. யானைகளை சரிவர பராமரிக்காததும், கவனிக்காததுமே மரணத்துக்கு காரணம். டைனோசர்களைப் போன்று வருங்கால தலைமுறையினர் யானைகளை மியூசியத்தில் பார்க்கும் நிலை ஏற்படக்கூடாது எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்தும் விவகாரத்தில் வலுவான நிலைப்பாடு எடுக்க பப்ளிசிட்டிதான் காரணம் என சிலர் பிரசாரம் செய்கின்றனர். கோர்ட்டுக்கு எந்த பப்ளிசிட்டியும் தேவையில்லை எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.