EICMA 2024: Royal Enfield Classic 650 Twin லுக்... இத்தாலியில் ரிவீல் செய்த RE நிறுவனம்!

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகின்றன. 

EICMA 2024

க்ளாஸிக் 650 ட்வின் பைக்கை ஒருவழியாகக் காண்பித்து விட்டது ராயல் என்ஃபீல்டு. பார்ப்பதற்கு அப்படியே 350 க்ளாஸிக் போலவே இருந்தாலும், இந்த பைக்கின் மெயின் ஃப்ரேம் ஷாட்கன் பைக்கின் ஃப்ரேமைக் கொண்டிருக்கிறது. மற்ற 650 சிசி பைக்குகளில் இருக்கும் அதே 47hp மற்றும் 56.5Nm டார்க்தான் இதிலும்.

Royal Enfield Classic 650

முன் பக்கம் 43மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க், 19 / 18 இன்ச் ஸ்போக் வீல் செட்அப், முன் பக்கம் 120 மிமீயும், பின் பக்கம் 90 மிமீயும் கொண்ட ஷாட்கன்னின் அதே சஸ்பென்ஷன் டிராவல் என்று வரப்போகிறது இது. இதுதான் ராயல் என்ஃபீல்டின் எடை அதிகமான பைக். 243 கிலோ கெர்ப் எடை. சிவப்பு, நீலம், டீல் புளூ, கறுப்பு க்ரோம் என்று 4 வகையான கலர்களில் வருகிறது க்ளாஸிக் 650 ட்வின். 

Royal Enfield Classic 650
Royal Enfield Classic 650
Royal Enfield Classic 650
Royal Enfield Classic 650
Royal Enfield Classic 650
Royal Enfield Classic 650

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.