Kerala: விஷம் கொடுத்து காதலனைக் கொன்ற வழக்கு; காதலி குறித்து மருத்துவர் அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலம், பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். கிரீஷ்மாவுக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரீஷ்மா கஷாயம் கொடுத்ததைத் தொடர்ந்து ஷாரோன் ராஜ் திடீர்  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

இறந்த ஷாரோன் ராஜ்

ஷாரோன் ராஜிக்கு அவரது காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால்தான் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்ததாக காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர் பார்த்த ராணுவ வீரரைத் திருமணம் செய்வதற்காகக் காதலனுக்குக் கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்துகொடுத்து காதலியே கொலை செய்த வழக்கு கடந்த 2022-ம் ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கிரீஷ்மா - இறந்த ஷாரோன் ராஜ்

அந்த வழக்கில் ஷாரோன் ராஜின் காதலியான களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். காதலன் ஷாரோன் ராஜைக் கொலை செய்ய  உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து கைது செய்யப்பட்டார். கிரீஷ்மாவுக்குப் பூச்சி மருந்து கொடுத்ததாக அவரது தாய் மாமா நிர்மல்குமாரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா உள்ளிட்ட அனைவரும் பிணை பெற்று வெளியே உள்ளனர். காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். "ஷாரோன் ராஜிக்குக் கொடுக்கப்பட்ட விஷம் 15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம். அந்த விஷத்தை முறித்துக் காப்பாற்றும் மருந்து இல்லை" என மருத்துவரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி ஷாரோன் ராஜிக்கு விஷம் கொடுப்பதற்கு முன்பு, காலையில் 7.30 மணிக்கு அந்த விஷம் உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படும் என கிரீஷ்மா இணையதளத்தில் தேடியதாக டிஜிட்டல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விஷத்தின் தன்மையைத் தெரிந்துகொண்டுதான் கிரீஷ்மா அன்று காலை 10.30 மணியளவில் ஷாரோன் ராஜிக்கு அதைக் கொடுத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.