Amaran : `அசாத்திய நடிப்பு... பிரமாண்ட புரொடக்ஷன்! - அமரன் திரைப்படத்துக்கு சிம்பு பாராட்டு!

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் வெளியாகி இருக்கும் திரைப்படம் அமரன். ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டினர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் அமரன் படத்தை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

Amaran success meet

`` அமரன் படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணினேன். ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினரின் அருமையான படம். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் அசாதாரணமான நடிப்பு அழமானதாகவும் அன்பு நிறைந்ததாகவும் இருக்கிறது. அதிக புரொடக்‌ஷன் வேல்யூ கொண்ட படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர் கமல் சாருக்கு வாழ்த்துகள்.

ஜிவி பிரகாஷின் இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி இருக்கிறது. எடிட்டர் கலைவாணன், பிரம்மிக்க வைக்கும் காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளர் சாய் மற்றும் திரில்லிங் சண்டைக்காட்சிகளை கொடுத்த அன்பறிவு ஆகியோருக்கும் பாராட்டுகள்.

Amaran

ரியல் ஸ்டோரியை அருமையாக காட்சிப்படுத்தியுள்ள ராஜ்குமாருக்கே அனைத்து பாராட்டுகளும் சேரும். அவரின் கடின உழைப்புதான் இப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது" என்று பாராட்டி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.