INDvsNZ: போதிய பயிற்சி இல்லையா? (அ) நன்றாக விளையாடவில்லையா?- இந்திய அணி தோல்வி குறித்து சச்சின்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.

முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவை வாஷ்அவுட் செய்திருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வி அடைந்திருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில் "சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாகதான் இருக்கிறது. தோல்விக்குக் காரணம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டியது கட்டாயம். போதிய பயிற்சி இல்லையா? அல்லது நன்றாக விளையாடவில்லையா? எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd

— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024

ஆனால் அதே நேரத்தில், முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் நன்றாக விளையாடினார். ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.