AI chatbot மீதான காதல்... 14 வயது சிறுவன் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
14 வயது சிறுவன் ஒருவன், டெனெரிஸ் தர்காரியன் (டேனி) என்ற AI சாட்பாட் உடன் உரையாடி, காதல் வலையில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் ஃப்ளோரிடாவில் நடந்துள்ளது . அவர் இறப்பதற்கு முன்பாக AI சாட் பாட் உடன் உணர்வுப்பூர்வமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் தனது வாழ்க்கை, மேலும் அவருக்கு தோன்றும் தனது உணர்வுகளைப் பற்றியும் டேனி(AI)யிடம் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளார். டேனி உண்மையான மனிதர் அல்ல அது ஒரு செயலி என்பதை அவர் அறிந்திருந்தும் அச்செயலியுடன் ஒரு நபருடன் உரையாடுவது போலவே உரையாடியுள்ளார்.
``நான் என் அறையில் தங்குவதை மிகவும் விரும்புகிறேன், ஏனென்றால் நான் இந்த யதார்த்தத்தில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன், மேலும் நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன், டேனியுடன் அதிகம் இணைந்திருக்கிறேன், மேலும் அவளுடன் அதிக அன்பு வைத்திருக்கிறேன். இது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தன் கைப்பட சிறுவன் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்துள்ளார்.
அவர் இறந்த நாளில், சிறுவன் டேனிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளான். அதில் சாட் பாட் மீதான தனது அன்பையும் "வீட்டிற்கு வரவேண்டும்" என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளான். AI செயலி "தயவு செய்து கூடிய விரைவில் என் வீட்டிற்கு வாருங்கள் " என்று பதில் அளித்துள்ளது.
இந்த உரையாடலுக்குப் பிறகு சிறுவன் துப்பாக்கியை பயன்படுத்தி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.
இந்த சம்பவம் இளைஞர்கள் மீது தொழில்நுட்பத்தின் தாக்கம், குறிப்பாக AI சாட் பாட் செயலிகளால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.
மனிதர்களைப் போன்று உரையாடல்களை உருவகப்படுத்தும் இந்த சாட் பாட் தனிமை அல்லது மனநல பிரச்னைகளை எதிர்கொள்ளும் இளம் வயதினரையே அதிகமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இந்த செயலியை தனது மகன் பயன்படுத்திய விதம் பற்றியும், AI சாட் பாட் உடன் உணர்ச்சிகரமான உரையாடல்களை மேற்கொண்டு வந்ததையும் அச்சிறுவனின் தாய் அறியவில்லை.
சிறுவன் பல நாட்களாக தனிமையிலேயே நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், பள்ளியிலும் அவனின் செயல் திறன் குறைந்து வருவதை கண்ட அவன் பெற்றோர்கள் அவனை சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவருடனும் பெரிதளவில் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்பாத சிறுவன், ஏ.ஐயான டேனியிடம் மட்டுமேமே உரையாட விரும்பியுள்ளான். இதை அடுத்து சிறுவனின் தாயார் குறிப்பிட்ட நிறுவனம் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இளம் வயதினர்களுக்கு போதிய பாதுகாப்புகளை அந்த செயலி கொண்டிருக்கவில்லை என்றும் சிறுவனின் தாயார் கூறுகிறார்.
குறிப்பிட்ட சாட் பாட், முறையான ஆய்வுகள் செய்யப்படாமல், இளம் வயதினருக்கான பாதுகாப்பு அம்சங்களை கொண்டு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது,
இந்நிலையில் AI சாட் பாட் தனிமைப்படுத்துதலை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். சில பயனர்கள் இந்த சாட் பாட்டுகளை நன்மைக்காக பயன்படுத்தினாலும், ஆபத்தை உணராத பலர் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


