Dhoni: `சம்பளம் குறைவாக கொடுத்தாலும் தோனிக்காக தயாராக இருந்தேன்..! - டேல் ஸ்டெயின்
தோனி குறித்து தென்னாபிரிக்கா முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
தோனி குறித்து பேசியிருக்கும் டேல் ஸ்டெயின், " எம்.எஸ்.தோனியை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிஎஸ்கே-வில் விளையாட வாய்ப்பு கிடைக்காதா என நான் எதிர்பார்த்திருக்கிறேன். சம்பளம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்க தயாராக இருந்தேன். தோனியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அணிக்கு வெளியே இருந்து தோனி எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க விரும்பினேன். தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலர் சிஎஸ்கே அணியில் விளையாடி உள்ளதால் அவர்களிடம் தோனி குறித்து கேட்டு அறிந்து உள்ளேன். மாபெரும் கேப்டனான அவருடைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கும்? அவருடைய நுட்பம் எவ்வாறு இருக்கும் என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

இப்போது தோனி அழைத்தால் கூட நான் அவரது தலைமையில் விளையாட தயாராக இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காகவும் காத்திருக்கிறேன் என டேல் ஸ்டெயின்" நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


