Bigg Boss 8: பிக் பாஸ் நாமினேஷன்; வைல்டு கார்டு போட்டியாளர்கள் யாரை டார்கெட் செய்கிறார்கள்?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8 நான்கு வாரங்களைக் கடந்து இருக்கிறது. மொத்தம் 18 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா 3 பேர் வெளியாகி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று வைல்டு கார்டு மூலம் ராணவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, ரயான், சிவக்குமார் என்று 6 நபர்கள் உள்ளே வந்திருகின்றனர். ஆட்டம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போது இன்றைய நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.

bigg boss 8

இந்த வாரம் ஒருவரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் தொடங்கிவிட்டது. அதுவும் இந்த சீசனில் முதல் முறையாக ஓப்பன் நாமினேஷன் நடந்திருக்கிறது. ஆண்களை பெண்களும், பெண்களை ஆண்களும் ஓப்பனாக நாமினேட் செய்திருக்கிறார்கள். புதிதாக வந்த வைல்டு கார்டு நபர்கள் அனைவரும், தீபக், சாச்சனா, அருண் போன்றவர்களை டார்கெட் செய்து நாமினேட் செய்து வருகின்றனர். இதில், அன்ஷிதா, அருண் ஒளிஞ்சு விளையாடுறார் என்று அனைவரின் முன்னிலையில் கூறி நாமினேட் செய்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.