Job Updates: டிப்ளமோ படித்தவர்களுக்கு பவர் கிரிட்டில் காத்திருக்கிறது டிரெய்னி வேலை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் (Power Grid) வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.
என்ன வேலை?
டிரெய்னி எலெக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் (Trainee Supervisor)
காலி பணியிடங்கள்: 70 (UR-21, EWS-4, OBC-12, SC-7, ST-3)
வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். (சில பிரிவினர்களுக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.24,000 -1,08,000
கல்வி தகுதி: டிப்ளமோ படிப்பில், எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரிக்கல் (பவர்) / எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்/ பவர் சிஸ்டம்ஸ் என்ஜினியரிங்/ பவர் என்ஜினியரிங் (எலெக்ட்ரிக்கல்) உள்ளிட்ட ஏதேனும் ஒரு மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பில், குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
குறிப்பு: பி.டெக்/ பி.இ / எம்.டெக் /எம்.இ ஆகிய உயர் படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு எப்படி நடைபெறும்?
எழுத்து தேர்வு / கணினி வழி தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 6, 2024
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.powergrid.in/
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


