Jadeja : `நான் ஓய்வு பெறும் வரை இது மட்டும் நடக்கக் கூடாது என்று நினைத்தேன்... - ஜடேஜா உருக்கம்!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இந்த தொடரை ஏற்கெனவே இழந்துவிட்டது. கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய ஜடேஜா, "தனிப்பட்ட முறையில் நான் ஓய்வு பெறும் வரை இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை இழக்காது என்று தான் நினைத்தேன்.

indian team

தொடர்ச்சியாக 18 தொடர்களை இந்திய மண்ணில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் நான் ஓய்வு பெறும் வரை டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்திய மண்ணில் இழக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் தற்போது அது நடந்துவிட்டது. நாங்கள் எங்களின் மீது பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டோம்.

ஜடேஜா

12 ஆண்டுகளாக எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் விளையாடி வந்த நாங்கள் இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் 5 போட்டியில் மட்டுமே தோற்று இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இப்பொழுது இந்த தொடரில் அடைந்த தோல்வி, எனக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டும் வருவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.