Diploma படித்தவர்கள் கவனத்துக்கு... BHEL நிறுவனத்தில் ரூ.12,500 உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி!

காசியாபாத்திலுள்ள இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் BHEL  (Bharat Heavy Electricals Limited) -ல் Diploma படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 90 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரங்கள்...

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலி பயிற்சி இடங்கள்: 90

பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகள், பாடவாரியாக பயிற்சி இடங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Technician Apprentice

கல்வித்தகுதி: பயிற்சி வழங்கப்படும் ஏதாவது ஒரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ எஞ்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.10.2021-க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.12,500 வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • SC/ST/OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

  • 1.10.2024 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

BHEL (Bharat Heavy Electricals Limited)

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

 BHEL நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

 பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத்தேர்வுக்கு வரும் போது தேவையான ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வித் தகுதி பற்றிய விவரங்களை  www.nats.eduction.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அதே இணையதளம் வழியாக BHEL நிறுவனத்தை தேர்வு செய்து  விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 4.11.2024

மேலும் கூடுதல் விபரங்களுக்கு Adv. No12930/64/HRD/ GAD/02 இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கையை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Download Notification PDF

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.