Darshan: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்; கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னட நடிகர் தர்ஷனிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கடாவுக்குத் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்த தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான தர்ஷன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் பிணை கோரி பெங்களூரு சிட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இறுதிக் கட்ட விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 14ம் தேதி நடந்த விசாரணையில் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஜெய்சங்கர் உத்தரவிட்டிருந்தார்.

தர்ஷன் தூகுதீபா

இதனை எதிர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் தனக்குக் கடுமையான முதுகுவலி இருப்பதால், மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள இடைக்கால பிணை உத்தரவு பிறப்பிக்கக் கோரியிருந்தார். இம்மனு மீது நீதிபதி விஷ்வஜித் ஷெட்டி இன்று (அக்டோபர் 30) முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது கன்னட நடிகர் தர்ஷனிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. 6 வாரத்திற்கு மட்டும் இடைக்கால பிணை வழங்கக் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.