Okinawa: தரமில்லாத உதிரிபாகம், அரசால் `Block List செய்யப்படும் இ-ஸ்கூட்டர்; பின்னணி என்ன?
இந்த ஆண்டு மே மாதமே எதிர்பார்க்கப்பட்டதுதான் இந்தச் செய்தி. ஆம், மத்திய அரசால் வழங்கப்படும் Fame-II ( (Faster Adoption & Manufacturing of Electric vehicles) மானியத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில முறைகேடுகளையும், தவறான தகவல்களையும் கொடுத்ததன் பேரில், ஒரு 6 நிறுவனங்கள் ஏற்கெனவே பிளாக்லிஸ்ட் லிஸ்ட்டில் இருந்தன.
ஹீரோ எலெக்ட்ரிக், பென்லிங் இந்தியா என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப், ஒக்கினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம், ரிவோல்ட் மோட்டார்ஸ், AMO மொபிலிட்டி, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி - இவை ஆறும்தான் அந்த லிஸ்ட்டில் இருந்தன.
இப்போது இதில் ஒக்கினாவா வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஃப்ளாக்ஷிப் திட்டம் Fame-II. இதன் கீழ்தான் மத்திய அரசு, வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கும் மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்துக்கென்று சில கைடுலைன்களும், விதிமுறைகளும் இருக்கின்றன. அதை எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், தரமில்லாத, சோதனை செய்யப்படாத சில உதிரிபாகங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதாக Ministry of Heavy Industries-க்குத் தகவல் வர, அதைத் தொடர்ந்து புலனாய்வில் இறங்கியிருக்கிறது கனரகத் தொழில்துறை அமைச்சகம்.
தொடர்ந்து 13 நிறுவனங்கள் மேல் வந்த புகார்களை அடுத்து, மேலே கூறப்பட்ட 6 நிறுவனங்கள் Fame-II திட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக அறியப்பட்டது. இதைத் தொடர்ந்து - AMO மொபிலிட்டி, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, ரிவோல்ட் மோட்டார்ஸ் போன்ற 3 நிறுவனங்கள், அந்த சப்சிடி தொகையை வட்டியோடு சேர்த்து சில மாதங்களில் அரசாங்கத்துக்குச் செலுத்தி, பிளாக்லிஸ்ட்டில் இருந்து தப்பித்துவிட்டன.

இது பழைய செய்தி. இப்போது இந்த பிளாக்லிஸ்ட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறது ஒக்கினாவா. இதன் மேல் ஏகப்பட்ட புகார்கள் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தால் பெறப்பட்டிருக்கின்றனவாம். முக்கியப் புகாராகப் பார்க்கப்படுவது - ஊழியர்களுக்கு இந்த ஆண்டு பல மாதங்கள் சம்பளம் தராமல் இழுத்தடித்திருக்கிறதாம் ஒக்கினாவா. இன்னொரு தரமான புகார் - சில ஒக்கினாவா டீலர்கள், தங்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட ஸ்கூட்டர்களில் சில உதிரிபாகங்கள் இல்லாமலேயே ஹேண்ட்ஓவர் செய்ததாகவும் புகார் வாசித்திருக்கிறார்களாம்.
Fame-II திட்டத்தின்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 50% உதிரிபாகங்கள் லோக்கல் தயாரிப்பாக இருந்தால் மட்டுமே, அது Fame-II மானியத்துக்குத் தகுதியான வாகனம். ஆனால் ஒக்கினாவா நிறுவனம் - DC to DC கன்வெர்ட்டர்கள், ட்ராக்ஷன் மோட்டார்கள், ஆன்போர்டு சார்ஜர்கள், வீல் ரிம்கள், பஸ்ஸர்கள், டயர்கள், ஹார்ன்கள், சீட்கள் என்று ஏகப்பட்ட ஐட்டங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
ஏற்கெனவே 2023 அக்டோபரில் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் மூலம் De-Register செய்யப்பட்டது ஒக்கினாவா. அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் எலெக்ட்ரிக் மானியம் மற்றும் இவி எக்கோ சிஸ்டத்தின் கீழ் வரும் எல்லா ஸ்கீம்களில் இருந்தும் பிளாக்லிஸ்ட் செய்யப்படக் காத்திருக்கிறது ஒக்கினாவா. சொல்லப்போனால், 2019-ல் மத்திய அரசின் Fame-II-வின் சப்சிடி தொகைக்குத் தகுதியான வாகன நிறுவனமாக விளங்கியது ஒக்கினாவாதான்.

அரசாங்கத்தோட நம்பிக்கையைச் சாய்ச்சுப்புட்டீங்களே ஒக்கினாவா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


