Shilpa Shetty: ஷில்பா ஷெட்டி ரெஸ்டாரன்ட்டில் மாயமான 80 லட்ச ரூபாய் BMW கார் - பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு மும்பை தாதர் பகுதியில் ரெஸ்டாரன்ட் ஒன்று இருக்கிறது. இந்த ரெஸ்டாரன்ட் தாதர் கோஹினூர் ஸ்குயர் கட்டிடத்தின் 48வது மாடியில் திறந்த பால்கனியில் செயல்படுகிறது.

வாடிக்கையாளர்கள் நிலவைப் பார்த்துக்கொண்டே சாப்பிட முடியும். பாஸ்டியன் என்ற பெயரில் செயல்படும் இந்த ரெஸ்டாரன்ட்டிற்கு பணக்கார வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். மிகவும் பிரபலமான இந்த ரெஸ்டாரன்ட் 2016ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு 2019ம் ஆண்டு இதில் ஷில்பா ஷெட்டி 50 சதவிகித பங்குகளை வாங்கினார். இந்த ரெஸ்டாரண்டிற்கு ருஹான் பெரோஸ் கான் என்ற தொழிலதிபர் தன் நண்பர்கள் இரண்டு பேருடன் தனது பி.எம்.டபிள்யூ காரில் வந்தார். அவர் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சாவியை பார்க்கிங் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டு ரெஸ்டாரன்ட் சென்றார்.

திருடப்பட்ட கார்

அவர் சாப்பிட்டு விட்டு வந்த போது தனது காரை பார்த்தபோது கார் காணாமல் போய் இருந்தது. காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்தனர். அதிகாலை 2 மணிக்கு மர்ம நகர் அக்காரைத் திருடிச்சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து தாதர் சிவாஜி பார்க் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர். திருடப்பட்ட காரின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும். போலீஸார் கார் பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இத்திருட்டில் கார் பார்க்கிங் பொறுப்பாளருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.