Vijay 69: நாளை வெளியாகும் டிரைலர் - படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
`விஜய் 69 என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தின் அப்டேட் தயாராகிவிட்டது.
ஆனால் நீங்கள் நினைக்கும் விஜய்யின் 69-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கிடையாது. இது `விஜய் 69 என்ற பாலிவுட் திரைப்படத்தின் அப்டேட். இந்த திரைப்படம் குறித்த தகவல் வெளியானதும் நெட்சன்களே இதை நகைச்சுவையாகச் சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர்.
விஜய் என்ற 69 வயது முதியவருக்கு சைக்கிளிங் போட்டியின் மேல் அதீத ஆர்வம் இருக்கிறது. அவருக்கு அந்த தடகள விளையாட்டு எந்தளவுக்கு ஃபேவரைட், 69 வயது முதியவரின் கனவு நனவானதா என்பதுதான் இந்த `விஜய் 69 திரைப்படத்தின் கதை. விஜய் என்ற முதியவருக்கு வயது 69 என்பதால்தான் இத்திரைப்படத்திற்கு `விஜய் 69 எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் பாலிவுட் இயக்குநர் அக்ஷய் ராய் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான `மேரி ப்யாரி பிந்து திரைப்படத்தின் இயக்குநர்தான் இந்த அக்ஷய் ராய். பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இத்திரைப்படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார்.
இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. நாளை (அக்டோபர் 29) இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகவிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

