ஊட்டி: அரசு மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் நாய்; சர்ச்சையாகும் படம்; நிர்வாகம் சொல்வதென்ன?

மலை மாவட்டமான நீலகிரியில் வாழ்ந்து வரும் மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை‌ மட்டுமே நம்பியுள்ளனர். பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்களுடன் தற்போது வடமாநில தொழிலாளர்களும் அரசு மருத்துவமனைகளை அதிகளவில் சார்ந்துள்ளனர்.

கோத்தகிரி பேருந்து நிலையம் எதிரில் உள்ள வட்டார அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்‌ மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிக்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 3 கோடி ரூபாயில் இந்த மருத்துவமனை அண்மையில் நவீனப்படுத்தப்பட்டது.

நோயாளிகள் படுக்கையில் நாய்

இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கையில் நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. எத்தனை கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்டாலும் கோத்தகிரி அரசு மருத்துவமனையின் உண்மை முகம் இதுதான் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அதிகாரிகள் சொல்வதென்ன?

இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் மருத்துவமனை அதிகாரிகள், "எப்படி இந்த தவறு நடந்தது என்பது தெரியவில்லை. விசாரணை நடத்தி வருகிறோம். கவனக்குறைவாக இருந்த பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.