Pa Ranjith: 12 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி... அடுத்த படம் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்!

தமிழ் திரைத்துறையில் `அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பா. ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறைகளைத் தனது படங்களில் தொடர்ச்சியாகக் காட்டிவரும் ரஞ்சித் இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநராகத் தடம் பதித்திருக்கிறார்.

பா. ரஞ்சித்

இயக்குநராக மட்டுமல்லாமல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே. பேபி, ப்ளூ ஸ்டார் ஆகிய திரைப்படங்கள் மூலம் சிறந்த தயாரிப்பாளராகவும் ரஞ்சித் திகழ்கிறார். இவரின் இயக்கம் மற்றும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில், கடந்த ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து, ரஞ்சித் யாரை வைத்து என்ன படம் எடுக்கப்போகிறார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்பார்பைத் தூண்டியது. இந்த நிலையில், ரஞ்சித் தனது அடுத்த படம் அப்டேட் குறித்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

ரஞ்சித் அண்ணா Next movie #வேட்டுவம் pic.twitter.com/uGAILJBF4M

— AR_Vinoth (@ARVinoth11) October 28, 2024

அந்த வீடியோவில், `` என்னுடைய அடுத்த படம் வேட்டுவம். அதில், தினேஷ் நடிக்கிறார். கூடிய சீக்கிரம் அதை அறிவிப்பேன்" என்று ரஞ்சித் கூறியிருக்கிறார்.

தினேஷ்

அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் தான் ஹீரோவாக அறிமுகப்படுத்திய தினேஷுடன் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஞ்சித், சில மாதங்களுக்கு முன்னரே, தன்னுடைய அடுத்த படத்தில் தினேஷ் நடிப்பதாக யூடியூப் நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.