TVK Vijay: `கோடி பேர் இருக்காங்க டா - மாநாட்டின் கூட்டம்; வாழ்த்திய இயக்குநர்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் இன்று மாலை 3 மணியளவில் கட்சிப் பாடலுடன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யின் பெற்றோர்களான ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். விஜய்யின் இந்த மாநில மாநாட்டிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
TVK Vijay

குறிப்பாக சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இயக்குநர் ரத்னகுமார் கோடி பேர் இருக்காங்க டா என்று விஜய்யின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

https://t.co/TOmtBT9xNt pic.twitter.com/hU3lnQZ7PK

— Rathna kumar (@MrRathna) October 27, 2024

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.