TVK Vijay : ``சினிமாவில் நடிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்னுதான் நினைச்சேன், ஆனா... - விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய் உரையாற்றி வருகிறார். ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் எல்லோரும் சமம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாறணுமா, அரசியல் மாறக் கூடாதா. இங்கு எப்போதும் மாறாதது மனித பிறப்பு, பசி, வேலை உழைப்பு, பணம் என சில மட்டும்தான்" எனப் பேசிய விஜய், அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார்.

Tvk Vijay

"அரசியல் நமக்கு ஒத்துவருமா என்று பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரிவராது. வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம். வாழ வைத்த மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். சினிமாவில் நடிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். சினிமாவில் சம்பாதித்து விட்டு செல்லாமல் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவே தற்போது வந்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.