TVK: கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்..! - விஜய் சொன்ன குட்டிக்கதை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் அந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்கைகளை விளக்கிப் பேசிய விஜய், தனது ஸ்டையில் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
``இது ஆடியோ லான்சில் பேசுவதுபோன்ற மோடிவேஷனல் கதை அல்ல. நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லப்போகிற கதை” என்று சொல்லத் தொடங்கினார் விஜய்.
தொடர்ந்து விஜய், "ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்ததாம். அப்போது பவர்ஃபுள்ளான தலைமை இல்லாததால், ஒரு சின்ன குழந்தையிடம் பொறுப்புகள் இருந்ததாம். அப்போது நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாரும் பயந்துவிட்டனர். ஆனால் அந்த சின்ன பையன் படைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு போலாம் என்று சொன்னானாம்.
அப்போதந்த பெருந்தகைகள் எல்லாரும், "இது சாதாரண விஷயம் கிடையாது. நீ ஒரு சின்ன பையன் அங்க பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். இது ஒன்றும் விளையாட்டு கிடையாது நீ பாட்டுக்கு விளையாடிவிட்டு ஓடி வருவதற்கு... போர் என்றால் படையை நடத்த வேண்டும். எதிரிப்படைகளை சமாளிக்க வேண்டும், அதைவிட முக்கியமாக ஜெயிக்க வேண்டும். உனக்கோ கூட்டமோ துணையோ யாரும் இல்லை. நீ எப்படி இந்த போரை நடத்துவ, எப்படி ஜெயிப்ப" எனக் கேட்டார்களாம்.
அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாட்டின் படைகளை நடத்திக் கொண்டு சென்ற அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். படிக்காதவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், கெட்ட பையன்சார் அந்த சின்ன பையன்." என்று கூறினார்.
விஜய் சொன்ன கதை பாண்டிய நெடுஞ் செழியனின் கதை என்று கூறப்படுகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

