TVK Vijay: `தவெக ஏன் கட்சியின் பெயர்- சுவாரஸ்யமான விளக்கமளித்த விஜய்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி.சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். மாநாட்டில் விஜய் தனது உரையை ஆற்றியபிறகு கட்சிப் பெயருக்கான விளக்கம் ஒளிப்பரப்பட்டது. அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். அரசியலில் மட்டும் அல்ல பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் இருக்க வேண்டும் என்றால் நம் பெயரே ஒரு அடையாளமாக மாற வேண்டும். அதற்கு பாஸிட்டிவ் எனர்ஜி பெயரில் இருக்க வேண்டும். அந்த எனர்ஜியைக் கொடுக்கிறதே அந்தப் பெயரில் இருக்கும் வார்த்தைகளின் வலிமைகள்தான்.
அப்படி ஒரு நேர்மறை அர்த்தம், நேர்மறை அதிர்வு, நேர்மறை வலிமையும் ஒரு சேரக் கொண்ட ஒரு சொல் இருக்கிறது. என்னைக்குமே தன்னோட தன்மையை இழக்காத ஒரு சொல் அது. இந்த வார்த்தையைச் சொல்லும்போதே உச்சரிக்கிறவர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த ஒரு பெரும் கூட்டத்தையே உணர்ச்சியின் உச்சத்தில் சொல்ல வைக்கின்ற சொல் அது. எல்லாரையும் உற்சாகப்படுத்த வைக்கின்ற சொல் அது. நம் மக்களின் நாடி, நரம்பு ஞானேற்றும் அந்த சொல் அந்த வார்த்தை வேறென்ன? வெற்றி... வெற்றி... வெற்றி... வெற்றிதான் அந்த சொல். வெற்றி என்றால் நினைத்தது எல்லாத்தையும் செய்து முடிக்கிறது, மனசுக்குள்ள இருக்க நோக்கத்தை நிறைவேற்றுவது, வாகை சூடுவது என பல அர்த்தங்கள் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு வார்த்தைதான் நம் கட்சியின் மையச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் மாறி இருக்கிறது. பிறகு நம் கட்சியின் முதல் சொல் தமிழகம் நம் மக்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும், சொல்கின்ற ஒரு வார்த்தை கட்சி பெயரின் முதல் வர்க்த்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணி தேர்ந்தெடுத்ததுதான் இந்த தமிழகம் என்ற வார்த்தை. தமிழகம் என்றால் தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என்று சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுபத்து என்று நம் இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தைதான் இந்த தமிழகம் என்று தமிழை முறையாகப் படித்த பலர் நமக்கு ஆழமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தத் தமிழகம்தான் அண்ணாவினால் முறைப்படி தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இப்போது கட்சியின் மூன்றாவது சொல்லிற்கு வருவோம். கழகம் அப்படி என்றால் படை பயிலும் இடம் என்று அர்த்தம் இருக்கிறது. அந்தவகையில் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடம்தான் நம் கட்சி, நம் கழகம். தமிழகம் ...வெற்றி.... கழகம் .... இந்த மூன்று எழுத்தையும் இணைத்து அரசியல் உலகின் அணையா பெருஞ் சுடர்தான் இந்த தமிழக வெற்றிக் கழகம் " என்று விஜய்யின் குரலில் கட்சிப் பெயருக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

