TVK Vijay Speech: `அவங்க பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா? - மாநாட்டில் விஜய் கூறிய பன்ச்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
மாநாட்டில் கட்சியின் கொள்ககளையும் நிலைபாடுகளையும் விஜய் பேசும்போது ஒவ்வொன்றாக எடுத்துரைத்தார். மாநாட்டில் விஜய் பேசிய சில பன்ச் லைன்க்ள் இங்கே!
`சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி மட்டும்தான் மாறணுமா? முன்னேற்றம் காணனுமா? ஏன் பாலிடிக்ஸ் மாறக்கூடாதா? முன்னேற்றம் காணக்கூடாதா?
`புள்ளிவிவரம் புலியாக கதறப்போறதும் இல்ல, உலக இலக்கியத்தின் வாக்கியங்களை சொல்லி `MP3 ப்ளேயர் ஆன் பண்ணின மாதிரி பேசப்போறதும் இல்ல...இங்க ஏற்கெனவே இருக்கிற அரசியல் வாதிகளை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ணப்போறது இல்ல! அதுக்காக கண்ணை முடிட்டு இருக்கப் போறதும் இல்ல.
`என்னது பெரியார் உங்க கொள்கை தலைவரா? அப்படினு சொல்லிட்டு ஒரு கூட்டம் கூச்சல் போட்டுட்டு பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு கிளம்பியிருவாங்க.
`சொல் அல்ல முக்கியம்..செயல் , செயல் , செயல்தான் முக்கியம்!
`எதை நினைச்சு அரசியலுக்கு வந்தோமோ..அதை கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல் செஞ்சு முடிப்போம்! அதுவரைக்கும் நெருப்பாகதான் இருப்போம்!
`சில விஷயங்கள்ல பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கி அடிச்சல்தான் நம்மை நம்புகிறவங்களுக்கு நல்லது செய்ய முடியும்னு இங்க தோணுச்சு!
`எதிரிகள் இல்லாத வெற்றிகள் இருக்கலாம். ஆனா, களம் இருக்கமுடியாது!
`நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்தி. நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள்!
`மகத்தான அரசியல்தான் அது மக்களுக்கான அரசியல்தான்!
`திராவிட மாடல்னு சொல்லிகிட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரை வச்சு..தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்ப சுயநல கூட்டம்தான் நம்முடைய அடுத்த எதிரி!
`மாற்று அரசியல்ங்கிற ஏமாற்ற வேலைகளையெல்லாம் நாம இப்போ செய்யப்போறது இல்ல!
`Extra Luggage -ஆக நான் இங்க வரல ப்ரோ!
`ஒரு முடிவோடதான் வந்திருக்கேன். இனிமேல் நோ லுக்கிங் பேக்!
`பவரை கையில வச்சுகிட்ட தனக்கு அடிபணியாதவர்களை பகை தீர்க்க வந்த கூட்டமில்ல! பக்கா ப்ளானோட, பப்ளிக் இன்டர்ஸ்டோட, பவர் பேக்டாக திரண்டிருக்கிற கூட்டம்!

`சோசியல் மீடியாவுல கம்பு சுத்த வந்த கூட்டம்னு நினைச்சுடாதீங்க! சமூகத்திற்காக வாளேந்தி நிற்கப் போகிற கூட்டம்!
`ஏ டீம், பி டீம்னு பொய் பிரச்சாரம் பண்ணி இந்த படையை வீழ்த்திடலாம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்காதீங்க!
` அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா? நீங்களும் அவங்களுக்கு கொஞ்சம்கூட சளைக்காதவர்கள்தானே...மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சினு மக்களை ஏமாத்துறீங்க!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

