TVK: மாநாட்டு மேடையில் விஜய் மற்றும் ஆனந்துடன் மூவர் - யார் அவர்கள்?
விஜய்யின் த.வெ.க மாநாடு தற்போது விக்கிரவாண்டியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டு மேடையில் ஐந்து நாற்காலி போடப்பட்டதில் இருந்து, யார் அந்த ஐந்து பேர்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்தது.
த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் த.வெ.க நிர்வாகிகளான தாஹிரா, ராஜசேகர், பி.வெங்கட்ராமன் ஆகியோர் மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
தாஹிரா வேலூரைச் சேர்ந்தவர். இவருக்கு த.வெ.க-வில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் த.வெ.க-வின் தலைமை நிலைய செயலாளர். சென்னை பம்மலை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் த.வெ.க-வின் பொருளாளர்.
இவர்கள் மூவரும் விஜய் மேடையில் ஏறியதில் இருந்து அவருடனேயே இருந்து வருகின்றனர். இவர்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்தும் மேடையில் உடன் இருந்தார்.
இன்றைய மாநாட்டில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் குறித்துத் தெரிந்துகொள்ள:
1. TVK Vijay: `தவெக ஏன் கட்சியின் பெயர்- சுவாரஸ்யமான விளக்கமளித்த விஜய்
2. TVK Vijay Speech: `பாம்பே ஆனாலும் பயமில்ல - கர்ஜித்த விஜய்!
3. TVK Vijay : `எங்களுக்கு இரண்டு எதிரிகள்... - மாநாட்டு மேடையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

