TVK: `என் கரியரின் உச்சத்தை உதறிவிட்டு உங்களை நம்பி வந்திருக்கிறேன்..! - விஜய்
விக்கிரவாண்டியில் சுமார் 4 மணியளவில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களை பற்றிய பேசிய த.வெ.க தலைவர் விஜய், "அரசியல் களத்துக்கு என்னை இப்போது அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இங்கேயும், எப்போதும் போல ஓய்வில்லாமல், அலட்டிக் கொள்ளாமல், அசராமல் உழைப்பேன்.
தேர்தல் அரசியலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் என அத்தனை பேரின் பாடத்தையும் படித்துக் கொண்டு, பலபேரின் உந்துதலை ஊக்கமாக எடுத்துக்கொண்டு, என்னுடைய கரியரின் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். தமிழக வெற்றி கழகம் தமிழ்நாடு அரசியலின் புதிய திசையாகவும் விசையாகவும் மாறி அனைத்து அரசியல் அழுக்குகளையும் அடித்துத் துவைத்து நீக்கும். தமிழ்நாட்டில் வெற்றிக்காக புதிதாய் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்" என்றும் பேசினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

