TVK : `விஜய் சார் தொடர்ந்து இந்த ஆயுதத்தை எடுக்கணும்..! - பேரரசு பளீச்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரமாண்டமாக ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கிறது.

சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விஜய் கட்சி தொடங்கியது முதல் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் ஒருவரான பேரரசுவை சந்தித்து த.வெ.க மாநாடு தொடர்பாகவும், விஜய்யின் அரசியல் பக்கம் தொடர்பாகவும் பேசினோம்.

தனது பாணியிலே பேச தொடங்கிய அவர், " விஜய் சாரை அரசியலுக்கு அழைத்து வரணும்னு அவங்க அப்பாவுக்கு அதிக ஆர்வம் இருந்துச்சு. அதை நானும் பார்த்திருக்கேன். ரசிகர்களை பார்க்கும்போது `ரசிகராக மட்டும் இருக்கக்கூடாது. நாளைக்கு தொண்டனாக மாற வேண்டிய நிலை வரும்னு அவர் சொல்வார். ஆனா விஜய் சாரை பார்க்கும்போது நமக்கு இந்த சிந்தனையெல்லாம் வராது. அவர் ரொம்பவே அமைதியாக இருப்பார். ஆனா, சந்திக்கும்போதெல்லாம் நாட்டு நடப்பு பற்றி டிஸ்கஸ் பண்ணுவோம்.

Director Perarasu

ஜெயலலிதா அம்மா மறைந்த சமயத்துல சந்திக்கும்போதும், அப்படி டிஸ்கஸ் பண்ணினோம். ஒரு கட்டத்துல அவர் அரசியல் வரமாட்டார்னு நினைச்சிட்டோம். அரசியல் ஆசை இருக்கிறவங்க மக்களை சந்திச்சு பேசுவாங்க. ஆனா, விஜய் சார் எப்போது ரொம்பவே அமைதியாக இருப்பாரு. அதுமட்டுமில்லாமல், அவங்க அப்பா கட்சி பெயரை பதிவு செய்த நேரத்துல பிரச்னைகள் வந்துச்சு. விஜய் சாருக்கு இந்த அரசியல் டச் பிடிக்கலைனு நாங்க நினைச்சிட்டோம். அவங்க அப்பாவுக்குதான் அரசியல் ஆசை இருக்கு போலனு நாங்க தீர்மானிச்சோம்.

ஆனால், இப்போ அதெல்லாம் இருக்குனு தெரிஞ்சுடுச்சு. முதல்ல காங்கிரஸ் ஆட்சி பண்ணினாங்க. அதன் பிறகு அண்ணாவோட ஆட்சி ரொம்பவே அற்புதமாக நடந்துச்சு. பிறகு கலைஞர் வந்தாரு. அப்புறம் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஒரு மாற்றம் தேவைப்படுகிற சமயத்துல எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார். மாற்றம் தேவைப்படாத சமயத்துல ஒருத்தர் அரசியலுக்கு வந்தால் ரொம்பவே போராட வேண்டிய சூழல் வரும். இப்போ மாற்றம் தேவைப்படுது. மக்கள் எப்போதும் ஒரு ஆட்சியை முழுமையாக கவனிப்பாங்க.

Director Perarasu

பிறகு, மக்கள் சரியான நேரம் வரும் வரை காத்திருப்பாங்க. அப்போது கடந்த ஆட்சி எப்படி இருந்ததுனு யோசிக்க மாட்டாங்க. கடந்த ஆட்சியோடு நடப்பு ஆட்சியை தொண்டன்தான் ஒப்பிட்டு பார்ப்பாங்க. மக்கள் அவங்க கைகளுக்கு பவர் வர்ற வரைக்கும் காத்திருப்பாங்க. அந்த பவர்தான் தேர்தல்." என்றவர், "விஜய் சார் டெபாசிட் இழக்கமாட்டார். அந்த ஓட்டுகள் அவருக்கு கிடைச்சிடும்.

அது போதாது. அதையும் தாண்டி அதிகமான வாக்குகள் பெற இந்த சினிமா புகழ் மட்டும் போதாது. மக்கள் நினைத்தால்தான் மீண்டும் அந்த மேஜிக் நடக்கும். உங்க மூலமாகவே விஜய் சாருக்கு நான் ஒரு விஷயம் சொல்றேன். அவரோட நலன் கருதியும், அவரோட கட்சி நலன் கருதியும் இந்த விஷயத்தை சொல்றேன். தொடர்ந்து ஒரே ஒரு குரல் இவர் மக்கள் கிட்ட கொடுத்துகிட்டே இருக்கணும். `ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க, பணம் வாங்கிட்டு ஓட்டு போடுறது நாட்டையே காட்டிக் கொடுக்கிறதுக்கு சமம். அது கேவலமான விஷயம் என்பதுதான் விஜய் சார் கொடுக்க வேண்டிய குரல்.

Vijay and Perarasu

விஜய் சார் தொடர்ந்து இந்த ஆயுதத்தை எடுத்தால் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. என்னதான் நல்ல கொள்கைகளை அவர் கூறியிருந்தாலும் அதிகமாக பணம் கொடுக்கிறவங்களுக்குதான் இங்க ஓட்டு! புதுசா யாராவது வரணும்னா...மாற்றங்கள் நிகழணும்னா...பணம் வாங்கிட்டு ஓட்டு போடுற கலாசாரம் ஒழியணும். விஜய் சார் இந்த விஷயத்தை தொடர்ந்து பேசணும். மக்கள் கையில இந்த மாதிரி பணம் வாங்கும்போது விஜய் இப்படி சொன்னார்னு நினைவுக்கு வரணும்." என்றார் வெளிப்படையாக!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.