Vijay Tvk: `120 கி.மீ-க்கு பேனர்; தலைமைச் செயலக செட் - தடதடக்கும் த.வெ.க மாநாடு ஏற்பாடுகள்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், விஜய்யை வரவேற்கும் விதமாக அவரின் தொண்டர்கள் வழி நெடுக பேனர்களை வைத்துள்ளனர். சென்னையின் தாம்பரத்திலிருந்து மாநாடு நடைபெறும் வி.சாலை பகுதி 120 கி.மீ தூரத்தில் இருக்கிறது. மாநாட்டுக்காக விஜய் சாலை மார்க்கமாகவே செல்லவிருப்பதாக தெரிகிறது.

TVK| Vijay

இதனால் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி வரைக்கும் முழுமையாக ஒவ்வொரு 50 மீட்டர் தூரத்துக்கும் ஒரு பேனரும் கட்சியின் சிவப்பு மஞ்சள் கொடியும் என விஜய்யை வரவேற்கும் வகையில் த.வெ.க தொண்டர்கள் சார்பில் வைக்கப்பட்டிருக்கிறது. 2026 வெற்றி நிச்சயம்! மக்கள் முதல்வரே! தமிழகத்தின் செல்லப்பிள்ளையே! ஆகிய வாசகங்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது.

மாநாட்டில் வைக்கப்பட்டிருப்பதை போன்றே அம்பேத்கர், பெரியார், காமராசர் ஆகியோரின் படங்களுடனும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்தின் படங்களோடும் விஜய் படத்தை வைத்து வாழ்த்துச் செய்திகளை வாசகங்களாக அடுக்கியிருக்கின்றனர். இதேபோல விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி நோக்கி வரும் சாலையிலும் வரிசையாக பேனர்களாக வைக்கப்பட்டிருக்கிறது.

அதேமாதிரி, மாநாட்டுத் திடலிலின் முகப்பிலுமே தலைமைச் செயலக செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்சி ஆரம்பிப்பதாக விஜய் அறிவித்த போதே 2026 தேர்தல்தான் இலக்கு என அறிவித்திருந்தார். அதனை குறிக்கும் வகையிலேயே மாநாட்டில் தலைமைச் செயலக செட் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.