TVK: பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்.. - மாநாட்டிற்குத் தயாராகும் 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடக்கும் இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை மாநாடு நடைபெறவிருக்கும் சூழலில் தொண்டர்கள் பலரும் இன்றே விக்கிரவாண்டியை நோக்கிப் புறப்படத் தொடங்கிவிட்டனர். பலர் கவன ஈர்ப்பிற்காக சைக்கிளிலேயே விக்கிரவாண்டிக்குப் பயணிக்கின்றனர். சென்னை தாம்பரத்திலிருந்து மாநாடு நடைபெறும் பகுதி வரைக்கும் வழிநெடுக பேனர்களை தொண்டர்கள் வைத்திருக்கிறார்கள். சாலை வழியாகவே விஜய் பயணிக்கவிருப்பதாக வெளிவரும் தகவலின் அடிப்படையில் விஜய்யை வரவேற்க இந்த பேனர்களை வைத்திருக்கிறார்களாம். 120 கி.மீ முழுவதும் ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் தொடர்ந்து பேனர்களை ஏற்றப்பட்டிருக்கின்றன.

Tiffin Kit

தலைமைச் செயலக செட், தலைவர்களின் பேனர் என ஒருபுறம் பரபரப்பாகப் பணிகள் நடந்து கொண்டிருக்க மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களுக்குக் கொடுப்பதற்காகச் சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் விறுவிறுப்பாகத் தயார் செய்து வருகிறார்கள். பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி கிட்டை தொண்டர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள். மொத்தமாக 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்கள் தொண்டர்களுக்காகத் தயாராகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://tinyurl.com/2b963ppb


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.