வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி... முழு விவரங்கள்!

கோவையில் வேலை வாய்ப்பு..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரங்கள்:

பணியின் பெயர்: நியாய விலைக் கடை விற்பனையாளர் (Salesman)

காலியிடங்கள் : 129

சம்பளம் : ரூ.8,600 - 29,000

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நியாய விலைக் கடை விற்பனையாளர் (Salesman)

பணியின் பெயர்: நியாய விலைக் கடை கட்டுநர் (Packer)

காலியிடங்கள்: 70

சம்பள விகிதம்: ரூ.7,800 - 26,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நியாய விலைக் கடை கட்டுநர் (Packer)

வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு விவரங்கள் 

வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்படும் முறை

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுரிமை தரப்படும்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பானது 01-07-2024 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப் பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SC/ST/SCA/BC/MBC பிரிவினர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற கணவரை இழந்த பெண்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

பொதுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 50 வயது வரையிலும்,

மாற் றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரையிலும் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்

தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக

நியாய விலைக் கடை விற்பனையாளர் (Salesman) பணிக்கு ரூ.150,

நியாய விலைக் கடை கட்டுநர் (Packer)  பணிக்கு ரூ.100.

இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

SC/ ST / PWD பிரிவினர்கள்/  கணவரை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.drbcbe.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவ நகலை டவுன்லோடு செய்து நேர்முகத்தேர்விற்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும் போது கல்வித்தகுதி, வயது, சாதி உள்பட அனைத்து சான்றிதழ்களின் அசல் பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்

நேர்முகத்தேர்வு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.

முக்கிய லிங்க் ( இணைய இணைப்பு )

நியாய விலைக் கடை விற்பனையாளர் (Salesman) பணிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

  நியாய விலைக் கடை கட்டுநர் (Packer) பணிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 முழு விவரங்களுக்கு அறிக்கை எண்:01 / 2024 இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கையை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.