``இங்கு சிறுநீர் கழித்தால் என்ன ஆகும் என புரிய வேண்டும் - கோவை மக்களின் நூதன எச்சரிக்கை!

பொது இடங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமானது. சுகாதாரத்தை காப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் எந்த பலனும் இல்லை. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் பொறுப்பற்ற சிலர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அதைத் தடுப்பதற்காக கோவை சிவானந்தா காலனி பகுதி மக்கள் எடுத்துள்ள நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிவானந்தா காலனியில் இருந்து புதுப்பாலம் பகுதிக்குச் செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ள்ன.

கோவை

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “இந்த வழியே செல்லும் பலர் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. ஜன்னலை திறந்து  வைத்தால் கூட குப்பென்று சிறுநீர் நாற்றம் அடிக்கிறது. இதுகுறித்து அரசுத்துறைகளில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தடுப்பதற்காக நாங்களே ஒரு முயற்சியில் இறங்கிவிட்டோம். தடுப்பு சுவர்களுக்கு முன்பு ஒயர் கட்டி, அதில் செருப்புகள், துடைப்பங்கள் உள்ளிட்டவற்றை மாட்டி விட்டுள்ளோம். இதைப் பார்க்கும்போது சிறுநீர் கழிக்க வருபவர்களுக்கு புரியும்.

செருப்பு, துடைப்பம் கட்டிய மக்கள்
செருப்பு, துடைப்பம் கட்டிய மக்கள்
செருப்பு, துடைப்பம் கட்டிய மக்கள்

இங்கு சிறுநீர் கழித்தால், என்ன ஆகும் என்று அவர்களை எச்சரிப்பதற்காகவே இப்படி செய்துள்ளோம். இது எங்களின் பாதுகாப்புக்காக நாங்களே எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.