Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!
வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.
சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal என்ற வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார்.
அது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கடந்த ஜூலை மாதம் இர்ஃபானுக்கு குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்தின் போது அவர் குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டுவதை வீடியாவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதன் பிறகு இர்ஃபானை மருத்துவத்துறை கண்டித்திருந்தது. `ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டு இர்ஃபான் தப்பித்து விடுகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் `மன்னிப்பு கேட்டாலும் இர்ஃபானை விடமாட்டோம் என திட்டவட்டமாக கூறியிருந்தார். சர்ச்சைகளுக்குப் பிறகு இர்ஃபானும் அந்த காணொளியை யூடியூபிலிருந்து நீக்கினார்.
இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு இர்ஃபானை அனுமத்திருந்த தனியார் மருத்துவமனைக்கு 10 நாள்கள் தடைவிதித்து, ரூ.50, 000 அபராதம் விதித்துள்ளது ஊரக நலப்பணிகள் இயக்ககம் (Directorate of Medical and Rural Health Services).
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் தவிர வேறு சிகிச்சைகள் எதையும் வழங்கக்கூடாது என்றும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


