உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் - திகார் சிறையிலிருந்து கரண் ஜோகருக்கு சுகேஷ் கடிதம்

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் தனது படத் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வெளியிலிருந்து முதலீடு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது நிறுவனத்தில் புனேயைச் சேர்ந்த மருந்து நிறுவன அதிபர் அதார் புனாவாலா ரூ.1000 கோடி முதலீடு செய்ய இருக்கிறார்.

கரண் ஜோகர் தனது நிறுவனத்திற்கு முதலீடு எதிர்பார்ப்பதைத் தெரிந்து கொண்டு டெல்லி திகார் சிறையில் மோசடி குற்றச்சாட்டுக்காக அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், தான் அதில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது வழக்கறிஞர் மூலம் முறைப்படி கரண் ஜோகருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

அக்கடிதத்தில், "இக்கடிதம் உங்களது தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான விருப்ப கடிதம் ஆகும். உங்களது கம்பெனிக்கு முதலீடு தேவைப்படுவதாக எனது நிதி ஆலோசகர் தெரிவித்தார்.

கரண் ஜோகர்

எனவே உங்களது கம்பெனியின் விரிவாக்கத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுக்க விரும்புகிறோம். 50 முதல் 70 சதவீத பங்குகளை வாங்கிக் கொள்கிறோம். எனது இந்த விருப்பம் அசாதாரணமாகத் தெரியலாம். ஆனால் எனது நோக்கம் உண்மையானது. என்னைப் பொறுத்தவரை, திரைப்படங்கள் ஒரு வணிகம் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் நான் ஒரு திரைப்பட ஆர்வலராக இருப்பதால், ஒரு ஆர்வமும் உணர்ச்சியும் இதில் இருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய திகார் சிறைச்சாலையின் சுவர்களிலிருந்து வரும் இந்த விருப்பம் அசாதாரணமானதாகத் தோன்றலாம் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் மிகவும் அற்புதமான மனிதர். நானும், எனது குடும்பமும் உங்களது கம்பெனியின் மிகப்பெரிய ரசிகர்கள். மிகவும் முக்கியமாக எனது அன்பு ஜாக்குலின் பெர்னாண்டஸ் உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார். உங்கள் நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது, உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறுவது ஒரு பாக்கியம். ஒரு மரியாதை. எனது இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் ஒப்பந்தமாகும். இதில் பேச்சுவார்த்தை கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.வி தினகரனுக்கு அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்தார். அதோடு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.