Bengaluru: பயணிகளுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. வைரலாகும் புது முயற்சி!

பெங்களூரில் கன்னடம் பேசும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கன்னடம் தெரியாதவர்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஒரு ஆட்டோக்காரர்.

வட மாநிலத்தில் இருந்து வேலைக்காக பெங்களூரு வரும் இளைஞர்கள் அங்குள்ள ஆட்டோக்காரர்களுடன் பேசுவதற்கு சிரமப்படுவது தொடர்கதை. ஆன்லைனில் இது பற்றி பலரும் புலம்பித் தள்ளியிருக்கின்றனர்.

சில ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை கன்னடத்தில் பேச கட்டாயப்படுத்தும் வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில் "Learn Kannada with Auto Kannadiga" என்ற முன்னெடுப்பில், ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள சிறிய அட்டை மூலம் வெளிமாநிலத்தவர்களை கன்னடம் பேச வைக்க முயற்சித்துள்ளனர்.

ஆட்டோவில் வருபவர்களுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்கும் முயற்சி!

அந்த சிறிய அட்டையில் தினசரி பயன்பாட்டுக்கான கன்னட வார்த்தைகள் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டு, அதன் ஆங்கில அர்த்தமும் உள்ளது. இதனால் ஆங்கிலத்தில் தங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளுக்கு இணையான கன்னட வார்த்தைகளைப் படித்து ஆட்டோக்காரர்களிடம் உரையாட முடியும்.

ஆட்டோவில் பயணிக்கும்போது நாம் அடிக்கடி உபயோகிக்கும் சொற்களான, "UPI ஏற்றுக்கொள்வீர்களா?", "இங்கே செல்ல முடியுமா", "இந்த பணத்துக்கு சில்லறை இருக்கிறதா" போன்ற கேள்விகளை கன்னடத்தில் எப்படி சொல்வது என்றும் அந்த அட்டையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அட்டையை வடிவமைத்து அறிமுகப்படுத்தியது ஆட்டோ கண்ணடிகா" என்ற கன்டன்ட் கிரியேட்டர். ஆட்டோ ஓட்டும் இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூபில் இயங்கி வருகிறார்.

இந்த அட்டைக்கு சமுக வலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் "இது ஒரு நல்ல முன்னெடுப்பு, எளிதாக கன்னடம் பேசத் தொடங்கலாம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.