Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர்தான் நீதிமன்றம் நியமித்த நடுவராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இவரது போலி நீதிமன்றம் செயல்பட்டு வன்ந்துள்ளது.

2019ம் ஆண்டு நிலத் தகராறு வழக்கில் இவர் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். பின்னாளில் இதே வழக்கு அகமதாபாத் குடிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த ஏமாற்றுக்காரரைப் பற்றி தெரியவந்துள்ளது.

போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர்

நீதிமன்றப் பதிவாளர் ஹர்திக் தேசாய் அளித்த புகாரின் அடிப்படையில், மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் மீது ஐ.பி.சி பிரிவு 171 (அரசு அதிகாரி பதவியில் இருப்பதுபோல காட்டிக்கொள்ளுதல்) மற்றும் பிரிவு 419 (ஆள் மாறாட்டம்) ஆகிய சட்டங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மோரிஸ் சாமுவேல் மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நிலத் தகராறு வழக்கு நிலுவையில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து ஏமாற்றியிருக்கிறார். ஏமாறுபவர்களிடம் வழக்குகளைத் தீர்ப்பதற்கான கட்டணமாக ஒரு தொகையை வசூலித்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மோரிஸ் முதலில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடுவராக தன்னை அறிமுகம் செய்துகொள்வார். பின்னர் தன்னுடைய நீதிமன்றம் போல செட் செய்யப்பட்ட அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று குறிப்பிட்ட நபருக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர்

மோரிஸ் சாமுவேலின் நடவடிக்கைகள் உண்மை எனத் தோன்ற வைப்பதற்காக அவரது கூட்டாளிகளே வழக்கறிஞர்களாகவும், நீதிமன்ற ஊழியர்கள் போலவும் செயல்பட்டுள்ளனர்.

இப்படி நூதனமான நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்றிவந்த மோரிஸ் இறுதியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் கூடுதல் விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.