Salman Khan: சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தவறு - மன்னிப்பு கேட்டு மீண்டும் மெசேஜ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சல்மான் கானை கொலை செய்யவும் முயற்சி செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ் ஆப் மெசேஜ் ஒன்று, மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு வந்தது. அதில் லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகையைத் தீர்த்துக்கொள்ள ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கவில்லையெனில் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதை விட மோசமான நிலை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று அதில் மிரட்டியிருந்தனர்.

மேலும், "சல்மான் கான் உயிரோடு இருக்கவேண்டுமானால் ரூ.5 கோடியைக் கொடுக்கவேண்டும். இந்த மெசேஜை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்." என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே தொடர் அச்சுறுத்தல் காரணமாக சல்மான் கானின் மும்பை மற்றும் மும்பை புறநகரில் இருக்கும் வீடுகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போட்டுள்ளனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. இக்கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே மிரட்டல் மெசேஜ் வந்த அதே போன் நம்பரிலிருந்து மீண்டும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் கொலை மிரட்டல் விடுத்துத் தவறு செய்துவிட்டேன் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டு மெசேஜ்களும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபரைக் கைது செய்ய மும்பையிலிருந்து தனிப்படை காவல்துறையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.

முன்னதாக சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் மும்பையில் சுட்டுக்கொலை செய்தனர். இக்கொலையில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஒருவர் தப்பித்து ஓடிவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.