ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான தகவலில், ``இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட சுமார் 32 இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு விமான நிலையங்களில் அவசர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் யுகே 17 என்ற விஸ்டாரா விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. 2 மணி நேர சோதனைக்குப் பிறகு லண்டனுக்கு மீண்டும் பயணத்தை தொடங்கியது. மற்ற விமானங்களுக்கான சோதனை, அந்த விமானங்கள் அதன் இலக்கை அடைந்தப்பிறகே மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகே அவை அனைத்தும் புரளி என்பது கண்டறியப்பட்டது. கிடைத்த மிரட்டல்கள் அனைத்தும், கழிவறைகள், சமூக வலைதளங்கள், இமெயில் போன்றவைகள் வழியே விடப்பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) விமான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் டெல்லியில் ஒரு சந்திப்பை நடத்தியது. BCAS -ன் டைரக்டர் ஜெனரல் சுல்பிகர் ஹசன், ``இந்திய வானம் முற்றிலும் பாதுகாப்பானது. பாதுகாப்பு நெறிமுறைகள் மிக கவனமாக, வலுவாக பின்பற்றப்படுகிறது. பயணிகள் எந்தவித அச்சமும் இல்லாமல் பயணிக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.

விமானம்

இதுபோன்று மிரட்டல் விடுக்கும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்க தடைவிதிக்கும்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, தன் பிஸ்னஸ் பார்ட்னரை பழிவாங்கும் நோக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது சிறுவன் 19 வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற மிரட்டல்கள் குறித்த ஆதாரங்கள் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.