``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்.. - ஜப்பான் இளைஞரின் இலக்கு!
ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் என்பதுதான் என்கிறார்.
இவரைப் பற்றி ஜப்பான் செய்தி நிறுவனம் ஓன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், ``தற்போது இரண்டு மனைவிகள், இரண்டு தோழிகள் என்ற அடிப்படையில் நான்கு பேருடன் வசித்து வரும் ரியுதா வதனாபே, இதற்கு முன்னர் ஒரு பெண்ணை விட்டு பிரிந்துவிட்டார். முழுக்க முழுக்க மனைவிகளின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வது, குழந்தைகளை பராமரிப்பது, சமையல் போன்ற பணிகளை செய்துவருகிறார்.
இவர்களுக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தின் மாத செலவு 914,000 யென்கள் (ரூ. 5 லட்சம்) நான்கு பெண்களும் பிரித்துக்கொள்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலியை பிரிந்த சோகத்தில், மனமுடைந்த ரியுதா வதனாபே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். அது அப்படியே திருமணம், காதலி, தோழி என வளர்ந்து நிற்கிறது.
சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், நான் பெண்களை நேசிக்கிறேன். நாம் ஒருவரையொருவர் சமமாக நேசிக்கும் வரை, எந்த பிரச்னையும் இருக்காது. நிறைய திருமணம் செய்து, 54 குழந்தைகள் பெற்று திருமணத்தின் கடவுளாக வேண்டும் என்பதுதான் என் ஆசை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


