Bigg Boss Tamil 8: `அதைபோய் கிண்டல் பண்ணினா என்ன பண்றது? - ரஞ்சித் குறித்து மனைவி பிரியா ராமன்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் `நச் கவனிப்பு பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் ரஞ்சித். இவருடைய கேம் பிளே குறித்தும், பிக்பாஸ் குறித்தும் பல விஷயங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் ரஞ்சித்தின் மனைவியும் நடிகையுமான பிரியா ராமன். 

ரஞ்சித்

"பிக்பாஸ் 24*7-ல இருந்து எல்லாமே மிஸ் பண்ணாம பார்த்திடுறோம். இந்த சீசன் தான் அதிகமா மிஸ் பண்ணாம பார்த்துட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடியும் பார்த்திருக்கேன் ஆனா இந்த அளவுக்கு இன்வால்வ் ஆனதில்ல. விஜய் சேதுபதி வேற லெவலில் பண்றாரு. ஹோஸ்டா? ரோஸ்டா?ங்கிற அளவுக்கு கொளுத்திப் போட்டுட்டு போயிடுறாரு. அவருடைய குறும்பு எல்லாம் நல்லா இருக்கு. இந்த வேகத்துக்கு அவர் இல்லாம அமைதியா ஒருத்தர் ஹோஸ்ட் ஆக வந்திருந்தா, இந்த அளவுக்கு இருந்திருக்குமான்னு தெரியல. விமர்சனமாகட்டும் மறைமுகமா அட்வைஸ் கொடுக்கிறதாகட்டும் எல்லாத்தையுமே சரியா பண்றார். அது நல்லா இருக்கு!" என்றவரிடம் ரஞ்சித் குறித்துக் கேட்டோம்.

"அவர் ஜெனரலாகவே அமைதியான பர்சன் தான். மெச்சூரிட்டி கொஞ்சம் அதிகம். முதலில் எல்லாரையும் அமைதியா அப்சர்வ் பண்ணுவார். இப்ப, அவர் மட்டுமல்ல நிறைய கன்டஸ்டன்ட் ஆக்டிவ் ஆகப் பார்க்க முடியுது. இதுக்கு முன்னாடியும் ரஞ்சித்துக்கு பிக்பாஸ்ல இருந்து அழைப்பு வந்திருக்கு. இந்த முறை எல்லாமும் ஜெல் ஆகிடுச்சு. அதனால போகலாம்னு முடிவு பண்ணி போயிருக்கார்.

பிரியா ராமன்

அவருக்குள்ள காமெடி திறமை நிறைய இருக்கு. வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைப்பார். ஆனா, அதே நேரம் யாரையும் காயப்படுத்த மாட்டார். டிவி எபிசோட்ல அவர் சேட்டையை பார்த்திருப்பீங்க. ஆனா அவர் வீட்ல இன்னும் ரகளை பண்ணுவார். கலகலன்னு இருப்பார் ஆனா கலவரத்தை உண்டாக்க மாட்டார்.

எப்பவும் அடுத்தவங்ககிட்ட குறை சொல்றதுக்கு முன்னாடி நம்மகிட்ட அந்த தகுதி இருக்கான்னு பார்க்கணும்னு சொல்லுவார். இதை கண்டிப்பா பிக்பாஸ்ல சொல்லுவார்னு தோணுது. ஒரு விரல் அங்க காட்டுதுன்னா 4 விரல் உன்னை காட்டுதுங்கிற சென்ஸ்ல தான் எப்பவும் பேசுவார்!" என்றதும் அவர் பிக்பாஸ் வீட்டில் எமோஷனலானது குறித்துக் கேட்டோம்.

பிரியா ராமன்

"அவர் அங்கப் போனதுல இருந்து 2 தடவை என்கிட்ட பேசினார்.(கேமராவை பார்த்து பேசியதை வைத்து..!) அங்க அவர் கஷ்டப்படுறார்னு எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஃபேக்னு ஸ்டிக்கர் ஒட்டினப்ப ரொம்ப ஃபீல் பண்ணினார். அது எங்க எல்லாருக்கும் கஷ்டமா இருந்தது. என் பையன் ரொம்ப ஃபீல் பண்ணினான். எல்லாருக்கும் அவங்க அவங்க டாடி தான் ஹீரோ. 12 வயசுல அவனுக்கு அவன் டாடி தான் சூப்பர் ஹீரோ. ஃபேக்னு சொல்றது, அவர் சாமி, தங்கம்னு சொல்றதை கலாய்க்கிறதெல்லாம் அவனுக்குப் பிடிக்கல. அதனாலேயே 24*7 அவன் பார்க்கிறதை தவிர்த்துட்டான். இப்ப பேசுறப்ப நானே சாமி, தங்கம்னு சொல்லியிருப்பேன். 20 வருஷம் ஒருத்தரோட வாழும்போது அது வரத்தான் செய்யும். அது அவருடைய இயல்பு. அவர் வந்த வழியை மறக்கல. அதை கிண்டல் பண்ணினா என்ன பண்றது? ஃபேக்னு ஒட்டினதை ஃபீல் பண்ணி ஆகாஷ்கிட்ட சொன்னாரு. வீக் எண்ட் எபிசோட்ல கிட்டத்தட்ட கலங்கிட்டாரு. கண்ணீர் தேங்கி வந்துடுச்சு. விட்டிருந்தா கொலாப்ஸ் ஆகியிருப்பாரு. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, `நமக்கு ஒண்ணுன்னா ஊரே திரண்டு வரும் தைரியமா இருன்னு சொல்லிட்டுப் போனார்!" என்றார்.

இன்னும் ரஞ்சித் குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக பிரியா ராமன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.