8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை; இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம் – போக்சோவில் 4 இளைஞர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் தந்தையை இழந்த அந்த 13 வயது சிறுமி, தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். தாய் விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சிறுமி. படிப்பில் படு சுட்டியான அந்த சிறுமி, சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். தாய் கூலி வேலைக்குச் சென்று மாலைதான் திரும்புவார் என்பதால், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறுமி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, `சாட் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஒருநாள் இரவு அந்த சிறுமி யாருடனயோ செல்போனில் ஆடைகள் இன்றி பேசுவதைப் பார்த்து பதறிப் போன அந்த தாய், சிறுமியிடம் அதுகுறித்துக் கேட்டிருக்கிறார்.
அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சிலர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள்தான் தன்னை வீடியோ காலில் அப்படி பேச சொன்னதாகவும் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அந்த சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது ஒலக்கூர் ஒன்றியம் ஊரல் கிராமத்தைச் சேர்ந்த முரளி, திருநாவுக்கரசு, பிரகலாதன், தனசேகர் உள்ளிட்டவர்கள், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, வெவ்வேறு காலகட்டங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, போக்சோ வழக்கைப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், முரளி, திருநாவுக்கரசு, பிரகலாதன், தனசேகர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


